முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓ.பி.எஸ் தாயார் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஓ.பி.எஸ் தாயார் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஓ.பன்னிர்செல்வத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின்

ஓ.பன்னிர்செல்வத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள், கடந்த மாதம் 24-ஆம் தேதி காலமானார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

தாயார் மறைவையொட்டி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள், கடந்த மாதம் 24-ஆம் தேதி தேனியில் காலமானார். அவரது தாயாரின் மறைவிற்கு பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் தங்களின் இரங்கல்களை தெரிவித்தனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை சென்னை திரும்பியதையடுத்து, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர்பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்பிற்கு பின் முதலமைச்சர் புறப்பட்டு செல்லும் போது, ஓ. பி.எஸ் ஆதரவாளர்கள் கோடநாடு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

First published:

Tags: CM MK Stalin, O Pannerselvam, OPS