தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 கீழ் விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வைக்கம் போராட்டம் தொடங்கி நூற்றாண்டு நாள் இன்று இதற்கு காரணமாக இருந்த தந்தை பெரியாரை போற்றும் விதமாக விதி 110 கீழ் வெளியிடுவதில் என் வாழ்நாளில் கிடைத்த நல்வாய்பாக கருதுகிறேன் என்றும் இறைவனுக்கே மறுப்பு சொன்ன இங்கர்சாலாய் எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார் என கருணாநிதி பெரியார் குறித்து கவிதை எழுதினார்.
தந்தை பெரியார் நடத்திய சமூக நீதி போராட்டங்கள் பற்பல அவற்றில் வைக்கம் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது, கேரளா மாநிலம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைய கூடாது என்பதற்கு எதிரானது தான் வைக்கம் போராட்டம் அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார் பல நாள் தங்கி இருந்து வைக்கத்தில் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவர் தந்தை பெரியார் போராட்டகாரருக்கும் மன்னருக்கும் இடையே காந்தி பேச்சுவார்த்தையில் ஈட்டுபட்டார்வைக்கம் போராட்டம் தான் தனக்கு ஊக்கம் அளித்தாக அண்ணல் அம்பேத்கர் தெரிவித்தார்.
வைக்கம் போராட்டம் நடைபெற்ற மார்ச் 30-ம் நாள் தொடங்கி வைக்கம் நூற்றாண்டு விழா தமிழகத்தில் நடத்தப்படும். ஏப் 1ம் தேதி கேரளா அரசின் சார்பில் நடைபெறும் வைக்கம் போராட்ட நிகழ்வில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறேன். பெரியார் போராடியதை நினைவு கூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கேரள வைக்கத்தில் உள்ள பெரியார் சிலை 8 கோடியே 14லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் தமிழரசு சார்பில் வெளியிடப்படும். ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக உருவான இடம் வைக்கம் போராட்டம். பெரியார் மொழி கடந்தவர் நாடு கடந்தவர் சுயமரியாதை பகுத்தறிவு சமூக நீதி சமநீதி ஆகியவற்றை திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Periyar