முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர, மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின்!

பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர, மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

CM MK Stalin about TN Budget 2023 | எல்லார்க்கும் எல்லாம் என்ற திசையை நோக்கிய பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • Last Updated :

எல்லார்க்கும் எல்லாம் என்ற திசையை நோக்கிய தமிழ்நாடு அரசின் பயணம் தொடரும் என நிதி நிலை அறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் கருத்தியலுக்கு எடுத்துக்காட்டான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை குறித்து பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் பட்ஜெட் மின்மினிப் பூச்சியைப் போன்றது என்றும், அது மக்களுக்கு வெளிச்சம் தராது என்றும் விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற திராவிட மாடலின் கருத்தியலை இந்த பட்ஜெட் பிரதிபலிப்பதாகவும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தலைமுறைகளைத் தாண்டி வாழ்வளிக்கும் நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா... மக்களை ஏமாற்றும் பட்ஜெட்...” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அதிமுக அரசால் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்து, வருவாய் பற்றாக்குறையை குறைத்து மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த நிதிநிலை அறிக்கை உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர, மின்மினிப்பூச்சி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

top videos

    தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்யும் அறிக்கையை உருவாக்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லார்க்கும் எல்லாம் என்ற திசையை நோக்கிய பயணம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: CM MK Stalin, TN Budget 2023