மதம் மாறிய பட்டியலின கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றியதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.
மதம் மாறிய பட்டியலின கிறிஸ்தவ மக்களுக்கு, இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்திக் கடந்த 19ஆம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் தலைமையில், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Also Read : தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை - வானிலை மையம் அலெர்ட்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், சிறுபான்மையினர் பிரிவு ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பாதிரியார்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தும், புத்தகங்களை வழங்கியும் நன்றி தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin