முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு

தலைமை செயலர் இறையன்பு

தலைமை செயலர் இறையன்பு

கலைஞர் கருணாநிதி பிரதான சாலையில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றை இணைக்கும், கலைஞர் கருணாநிதி பிரதான சாலையில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு 1.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டார். மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து வரைப்படம் மூலம் தலைமை செயலாளர் இறையன்புவிற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதையும் வாசிக்க:  "ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் தொல்லியல் மேல் உள்ள ஆர்வத்தை வெளிகாட்டுவதில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதன்பின் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தபடும் ஜல்லி உள்ளிட்டவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

top videos
    First published:

    Tags: Iraianbu IAS