முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குடியரசு தலைவரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

குடியரசு தலைவரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

  • Last Updated :
  • Delhi, India

தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சரை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அங்கிருந்து தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற அவர், டெல்லி பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து அரசு இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரிடம் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பதற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: CM MK Stalin, President Droupadi Murmu, Tamil Nadu