கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்க நேரில் வருகை தரும்படி குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படும் இவற்றுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் அழைத்து திறப்பு விழாவை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க : கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்... சசிகலா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி முடிவு
இதற்காக குடியரசுத் தலைவரை இன்று காலை 11.30 மணியளவில் சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் ஆயத்தமான நிலையில், இரவு 8.30 மணிக்கு டெல்லி புறப்படும் ஏர்-இந்தியா பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தனது டெல்லி பயணத்தை கடைசி நிமிடத்தில் ஒத்திவைத்த முதலமைச்சர் ஸ்டாலின், நேற்றிரவு வீடு திரும்பினார். இந்த நிலையில் காலை 6 மணியளவில் டெல்லி புறப்படும் விமானத்தில், ஸ்டாலின் தலைநகர் புறப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Delhi, DMK Karunanidhi, President Droupadi Murmu