முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெளிநாட்டுக்கு பயணம் செல்வது ஏன்...? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!

வெளிநாட்டுக்கு பயணம் செல்வது ஏன்...? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Chief Minister Stalin | வெளிநாடு பயணத்தின்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதென முதலமைச்சர் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

9 நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். அதன் தொடர்ச்சியாக வரும் ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.

' isDesktop="true" id="988292" youtubeid="fTsVbUHoJ3Y" category="tamil-nadu">

top videos

    இந்த மாநாட்டில் பங்கேற்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதாகவும், வெளிநாடு பயணத்தின்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

    First published:

    Tags: MK Stalin, Singapore