முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆய்வுப் பணியில் மு.க.ஸ்டாலின்

ஆய்வுப் பணியில் மு.க.ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் சிறு, குறு வாய்க்கால்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீர்வளத்துறையின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் இன்று ஆய்வு செய்துவருகிறார். காலை 9 மணிக்கு தஞ்சையை அடுத்த ஆலக்குடி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலை முத்துவாரியில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், விண்மங்கலத்தில் கால்வாய் சீரமைப்புப் பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர், செங்கரையூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

' isDesktop="true" id="1011348" youtubeid="h4fDBz9Fwd4" category="tamil-nadu">

அதன்பின் வெள்ளனூரில் நந்தியார் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு விட்டு விமானம் மூலம் இன்றிரவு சென்னை திரும்புகிறார்.

First published:

Tags: Cauvery Delta, CM MK Stalin, Tamil Nadu