முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உலகம் முழுவதும் ஈஸ்டர் கொண்டாட்டம் கோலாகலம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலகம் முழுவதும் ஈஸ்டர் கொண்டாட்டம் கோலாகலம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

சகோதரத்துவம் மேலோங்க உறுதிமொழி ஏற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று ஈஸ்டர் பெருவிழா. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்தெழுந்ததைக் கொண்டாடும் விழாதான் ஈஸ்டர். இந்த விழா ஒவ்வொரு வருடமும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இயேசு பிறந்து 33 வருடத்தில் இது நடந்ததாக கருதப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாள் தவக்காலம் அனுசரிக்கின்றனர்.

உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் தினத்தை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாடிகள் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். ஈஸ்டர் உரையில் பேசிய அவர், ‘உலகின் அனைத்து போர்களையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என்று பேசினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில், ‘உலக மக்களின் நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்த கருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறிஸ்த்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில், ‘ஈஸ்டர் திருநாளில், எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இணக்கமான உலகை உருவாக்குவதில் இயேசு கிறிஸ்துவின் கருணை, இரக்கம், உள்ளடக்கம், மன்னித்தருளும் செய்தியை நம்முள் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Easter