ஆரியத்தை வீழ்த்தும் சக்தி கொண்ட திராவிடத்தைப் பார்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், "முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் த.மோ.அன்பரசன் செங்கோல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக்கூறி உரையைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியின் அவலங்களை இரண்டே ஆண்டுகளில் சீர் செய்துள்ளதாக கூறினார். திராவிட மாடல் காலாவதியான கொள்கை அல்ல என்றும், சனாதனத்தை காலாவதியாக்கிய மாடல் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கப் பார்ப்பது ஏன் என வினவிய மு.க.ஸ்டாலின், அதற்காகத் தான் அவர் அனுப்பி வைக்கப்படாரா என கேள்வி எழுப்பினார். சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் அரசு விளக்கம் அளித்த பிறகும் பேசி வரும் ஆளுநர், குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறாரா எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மேலும், தன்னை சர்வ அதிகாரம் படைத்தவர் என்று நினைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாக்கும் ஒரு சட்டத்திற்கு, நியமன ஆளுநரிடம் கையெழுத்திற்காக காத்திருப்பதை விட மக்களாட்சிக்கு அவமானம் இல்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, RN Ravi, Tamil Nadu Governor