முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாடாளுமன்ற தேர்தல் வியூகம் : திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் வியூகம் : திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin | ஒவ்வொரு தொகுதிகளிலும் 40 ஆயிரம் வரை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடாளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுகவை பலப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், திமுக சார்பில் கடந்த மார்ச் மாதம் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன், திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பார்வையாளர்களுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வியூகம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு தொகுதிகளிலும் 40 ஆயிரம் வரை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் அறிவுத்தினார்.

இதையும் படிங்க: செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி இருக்கும்…? மனிதர்களை அனுப்பி சோதனையை செய்யும் பணியில் நாசா தீவிரம்..!

கட்சியை பலப்படுத்தும் நோக்கில் திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை அனைவரிடத்திலும் விளக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் தான் மாபெரும் வெற்றியை வசப்படுத்த முடியும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

First published:

Tags: CM MK Stalin, DMK, Tamilnadu