முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவன சிஇஓக்களோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவன சிஇஓக்களோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

சிங்கப்பூர் - முன்னணி தொழில் நிறுவன சிஇஓக்களோடு முதல்வர்

சிங்கப்பூர் - முன்னணி தொழில் நிறுவன சிஇஓக்களோடு முதல்வர்

CM MK Stalin in Singapore | சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒன்பது நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, சிங்கப்பூருக்கு சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினை, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதன்படி, டெமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தில்கன் பிள்ளை சந்திரசேகரா, செம்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிம்யன் வோங்க், கேப்பிட்டல் லேன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் தாஸ் குப்தா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அப்போது, சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும்படி முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். மேலும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வர்த்தகத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மேலும் படிக்க... Video | 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றப் போறீங்களா? இதெல்லாம் கவனிங்க...!

அதன்பின் மாலையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.

top videos
    First published:

    Tags: CM MK Stalin, Singapore