சென்னையில் கடந்த ஓராண்டு காலமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்கப்படுகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் - ₨102.63, ஒரு லிட்டர் டீசல் - ₨94.24க்கு விற்பனையாகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே 2010 ஜூன் 26 மற்றும் 2014 அக்டோபர் 19 முதல் சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயிக்கப்படும் என்று அரசு முடிவு செய்தது. அது முதல், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சர்வதேச விலைகள் மற்றும் இதர விஷயங்களைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதைத் தவிர்த்து, பெட்ரோல்,டீசல் மீது மத்திய மாநில அரசுகள் கூடுதல் வரியை விதிக்கின்றன.
2014ம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிந்தைய மாறுபட்ட பொருளாதார சூழல் காரணமாகவும், சர்வதேச அரசியல் போக்குகள் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, 2021ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது. அதற்கு அடுத்தபடியாக, மே, 2022ல் பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான மத்திய கலால் வரி 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது.
அதே போன்று, பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 விலை குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை திமுக அளித்தது. இருப்பினும் பெட்ரோலுக்கு மட்டும் ரூ.3 குறைத்தது. மத்திய அரசிடம் இருந்து தமிழ் நாட்டிற்கு கிடைக்கும் வரிப் பங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது என்றும் இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திகு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
தற்போது, சர்வதேச அளவில் சீனா, அமெரிக்க பொருளாதார எழுச்சி காரணமாக கச்சா எண்ணெய் தேவைகள் அதிகரிக்கும், இதனால் அதன் விலைகள் அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Petrol Diesel Price, Petrol price