ஒடிசா ரயில் விபத்தில் தப்பிப் பிழைத்து சென்னை திரும்பிய பயணிகள், தங்களது திக் திக் அனுபவங்கள் குறித்து விவரித்தனர். விபத்தில் இருந்து நல்வாய்ப்பாக தப்பிய போதிலும் அப்பகுதியில் நிலவிய காட்சிகளும், அழுகுரல்களும் மீண்டும் மீண்டும் நினைவலைகளில் வந்து போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
குழந்தைகளின் கோடை விடுமுறையை, அசாமில் பணியாற்றும் கணவருடன் கழிப்பதற்கான சென்று திரும்பிய சிவரஞ்சனி, ஆங்காங்கே உயிரிழந்தவர்களின் உடல்களை பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்ததாக கூறுகிறார்.
தாம்பரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி, தனது குழந்தையுடன் வேன் மூலம் பலாசூர் வந்து, அங்கிருந்து புவனேஸ்வர் சென்று பின்னர், சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார். இதே போல், வேலை தேடி நேர்காணலுக்காக சென்று விட்டு திரும்பிய விக்னேஷ், நூலிழையில் உயிர்தப்பியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க... சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் பெட்டியில் விரிசல்... பெரும் விபத்து தவிர்ப்பு...!
விபத்து குறித்த செய்தி அறிந்தது முதல் மகனை நேரில் காணும் வரை உயிரே இல்லாதது போன்று உணர்ந்ததாக விக்னேஷின் தாயார் தெரிவித்துள்ளார். கோரமண்டல் ரயிலில் டிக்கெட் பதிவு செய்து கடைசி நேரத்தில் உறுதி செய்ய முடியாததால், பெரும் விபத்தில் இருந்து தப்பி உள்ளதாக மதன் குறிப்பிட்டுள்ளார்.
நொடியில் நடந்து முடிந்த இந்த விபத்து, உறவுகளை இழந்தவர்களுக்கும் அதில் பயணித்தவர்களுக்கும் மாறாத வடுவாக மாறிவிட்ட நிலையில், இது போன்ற மற்றொரு கோர விபத்து மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Odisha, Train Accident