முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு குத்தகை நிலங்களை மறுஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு குத்தகை நிலங்களை மறுஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

வருவாய் நலனை பாதுகாக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு சொத்துக்களின் குத்தகைகளை மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968-ஆம் ஆண்டில் அரசு குத்தகைக்கு ஒதுக்கியது. இந்த குத்தகை காலம் 2008-ம் ஆண்டில் நிறைவடைந்த நிலையில், சந்தை மதிப்பு அடிப்படையில், 36.58 கோடி ரூபாய் வாடகையை செலுத்துமாறு கடந்த 2015-ஆம் ஆண்டில் மதுரை வடக்கு வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 300 கோடி ரூபாய் அரசு நிலத்தை 14 ஆண்டுகளாக அனுமதியின்றி பயன்படுத்தி, அதிக லாபம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, ஒரு மாதத்தில் பாண்டியன் ஹோட்டலை அகற்றி அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வருவாய் நலனை பாதுகாக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு சொத்துக்களின் குத்தகைகளை மறுஆய்வு செய்யவும், அரசு நிலங்கள் குத்தகை விவரங்களை மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தமிழக வருவாய் துறை செயலாளர் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

First published:

Tags: Chennai High court, Lease, TN Govt