முகப்பு /செய்தி /தமிழ்நாடு / On Street Parking திட்டம், சாலைகள் சீரமைப்பு- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

On Street Parking திட்டம், சாலைகள் சீரமைப்பு- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016-ம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில், மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார். மேயராக பதவியேற்ற குறுகிய காலகட்டத்திலேயே 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேயர் பிரியா தாக்கல் செய்தார்.

கடந்த பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இவற்றில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஒரு சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

top videos

    பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

    பேருந்து சாலை : சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை பணிகளை மேற்கொள்ள 881.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
    சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உள்ள முக்கிய வணிக பகுதிகளில் On Street Parking திட்டத்தை செயல்படுத்த முடிவு
    முதியவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யும் முறை முன்பதிவு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்
    சென்னை மாநகராட்சியில் வணிக வளாகம் மற்றும் சமுதாய நல கூடங்களை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு
    சென்னையில் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகளை விஞ்ஞான ரீதியான முறையில் எரிக்க 5 டன் திறன் கொண்ட எரியூட்டி ( incinerator) கட்டமைத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்
    சிந்தாரிப்பேட்டையில் 2.69 கோடி ரூபாய் செலவிலும் , பெசன்ட் நகரில் 80 லட்ச ரூபாய் செலவிலும் நவீன மீன் அங்காடி
    சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78 கிமீ நீளத்திற்கு 55.61 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைக்கப்படும்
    தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 149.55 கோடி மதிப்பில் 251 கிமீ தூரத்திற்கான சாலைகள் மறுசீரமைக்கப்படும்
    நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 327.63 கோடி ரூபாய் செலவில் 425 கி. மீ நீளத்திற்கு சாலைகள் மறுசீரமைக்கப்படும்
    First published:

    Tags: Chennai