முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் தென்சென்னை உள்ளிட்ட 9 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கவனம் செலுத்துகிறது: எல்.முருகன்

தமிழ்நாட்டில் தென்சென்னை உள்ளிட்ட 9 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கவனம் செலுத்துகிறது: எல்.முருகன்

எல்.முருகன்

எல்.முருகன்

வாக்குச்சாவடி அளவில் குழுக்களை வலிமைப்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக எல்.முருகன் கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் தென்சென்னை உள்ளிட்ட 9 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கவனம் செலுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தென்சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மேற்பார்வையில் தமிழ்நாட்டின் 9 தொகுதிகளில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்று வருவதாக கூறினார்.

வாக்குச்சாவடி அளவில் குழுக்களை வலிமைப்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கட்சியினர் தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட்டார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தென்சென்னையில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: ADMK, BJP, L Murugan