முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா... மத்திய அரசு எழுதிய முக்கிய கடிதம்..!

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா... மத்திய அரசு எழுதிய முக்கிய கடிதம்..!

காட்சி படம்

காட்சி படம்

தஞ்சாவூரில் கொரோனா உறுதியாகும் விகிதம் அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கண்காணிக்க வலியுறுத்தி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாகச் சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், நடப்பு வாரத்தில், தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் கொரோனா உறுதியாகும் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் பதிவானதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் தஞ்சாவூரில் கொரோனா உறுதியாகும் விகிதம் அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், பாதுகாப்பாக இருக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Also Read : அ.தி.மு.க கொடி பயன்பாடு... இபிஎஸ் விமர்சனத்துக்கு ஓ.பி.எஸ் பதிலடி

top videos

    கொரோனா பரவலைத் தமிழ்நாட்டில் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது இடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Central government, Corona, Corona spread