முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஒரே மாதத்தில் 5 மடங்கு அதிகரித்த கொரோனா பரவல் : தமிழக அரசை அலெர்ட் செய்த மத்திய சுகாதாரத்துறை!

ஒரே மாதத்தில் 5 மடங்கு அதிகரித்த கொரோனா பரவல் : தமிழக அரசை அலெர்ட் செய்த மத்திய சுகாதாரத்துறை!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் பாதிப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு வேகமாக உயரும் தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் பாதிப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும்,  தொற்று கண்டறியப்படுபவர்களின் சராசரி விகிதம் நாட்டில் 0.61 புள்ளியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மிக அதிகமாக 1.99  இருப்பதாக கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் கண்காணிக்க வேண்டும் எனவும், பரிசோதனை, தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்துதலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதனுடன், இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலையும் கண்காணிக்க வேண்டும் என்றும், மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Central government, Covid-19