முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேசிய சராசரி அளவைவிட அதிக அளவில் மின் விநியோகம்: தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

தேசிய சராசரி அளவைவிட அதிக அளவில் மின் விநியோகம்: தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

தமிழ்நாடு சட்டமன்றம்

தமிழ்நாடு சட்டமன்றம்

தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும் என்றும் மத்திய அமைச்சர் உறுதி

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம், தேசிய சராசரி அளவைவிட உயர்ந்துள்ளதாக மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் எழுதியுள்ள கடிதத்தில், ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக இருந்த நிலையில், 2021-2022 ஆம் ஆண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 106 டிகிரி வரை வெயில் வாட்டி வதைக்கும்... கவனமா இருங்க... வானிலை அலெர்ட்..!

ஆனால், தமிழ்நாட்டில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும் என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தனது கடிதத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Central government, CM MK Stalin