முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், நிர்வாக ரீதியிலான 72 மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.அதைத்தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் விதமாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க ”உடன்பிறப்புகளாய் இணைவோம்” என்ற மாபெரும் முன்னெடுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியை ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஜூன் 3ஆம் தேதிக்குள் முடிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று வரும் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜூன் 3ஆம் தேதி வரை கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இந்திய திருநாடே திரும்பி பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், திருவாரூரில் ஜூன் 3ஆம் தேதி கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற உள்ளதாகவும், அப்போது திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் வளாகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டடங்களை அகில இந்திய தலைவர்கள் திறந்து வைத்து உரையாற்ற உள்ளதாகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, DMK, Thiruvarur