முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்ஸை அங்கீகரிக்கக் கூடாது- டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்ஸை அங்கீகரிக்கக் கூடாது- டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மீது இறுதி தீர்ப்பு வரும் வரை, எந்த முடிவும் எடுக்கக் கூடாது என வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு, நீதிபதி புருசந்திரா குமார் கவ்ரவ் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றுவருகிறது.

அப்போது, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில், அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஆவணங்களை சரிபார்த்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த தேர்தல் ஆணையம், 10 நாட்கள் அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று, தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க கூடாது.

top videos

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது இறுதி தீர்ப்பு வராமல் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க கூடாது என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Delhi High Court, Edappadi Palaniswami, O Panneerselvam