முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இபிஎஸ்ஸுக்கு பொதுச்செயலாளர் அங்கீகாரம்- தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இபிஎஸ்ஸுக்கு பொதுச்செயலாளர் அங்கீகாரம்- தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மாதிரி படம்

மாதிரி படம்

AIADMK General Secretary Case | அதிமுக கட்சி விதிகளில் எவ்வித மாற்றங்களும் செய்யக்கூடாது என்று உத்தரவிடக் கோரியும் மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  • Last Updated :
  • Delhi, India

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்த தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் என்ற முறையில், ராம் குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலைத் திட்டம்- எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு

அதில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதி தீர்ப்பு வரும் வரை, அதிமுக கட்சி விதிகளில் எவ்வித மாற்றங்களும் செய்யக்கூடாது என்று உத்தரவிடக் கோரியும் மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

First published:

Tags: ADMK, EPS