முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "மன்னிப்பு கேட்க முடியாது..." கனிமொழிக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ்..!

"மன்னிப்பு கேட்க முடியாது..." கனிமொழிக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ்..!

கனிமொழி - அண்ணாமலை

கனிமொழி - அண்ணாமலை

திமுக எம்.பி கனிமொழிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சார்பில் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சொத்துப் பட்டியல் விவகாரத்தில் திமுக எம்பி கனிமொழி அனுப்பிய நோட்டீசுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை கடந்த ஏப்ரல் 14ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினர் மற்றும் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அதில், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சொத்துகள் உள்ளன என வீடியோவையும் வெளியிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு, திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், அடிப்படை ஆதாரம் இன்றி அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனவும், 48 மணி நேரத்திற்குள் அவதூறு வீடியோவை உடனடியாக நீக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.தவறும் பட்சத்தில் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கனிமொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க; செல்போனில் ஆபாச சாட்டிங்... முதியவருக்கு ஆசை வலை... வசமாய் சிக்கிய இளம்பெண்..!

இந்த நிலையில் கனிமொழிக்கு, அண்ணாமலையின் சார்பில் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கனிமொழியின் சொத்து விவரங்களை வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், சட்ட நடவடிக்கையின் மூலம் தனது குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Annamalai, Kanimozhi