முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எல்லாருக்கும் கிடைக்குமா மாதம் ரூ.1000.? பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் சொன்னது என்ன?

எல்லாருக்கும் கிடைக்குமா மாதம் ரூ.1000.? பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் சொன்னது என்ன?

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. அதனை நிறைவு செய்யும் வகையில் இன்றைய பட்ஜெட் தாக்கலில் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று (20.03.2023) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பொது மக்களின் குறிப்பாக மகளிர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமத்தொகையாக வழங்கும் திட்டத்தின் அறிவிப்பு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டம், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் வழங்கப்படவில்லை என்று இதர அரசியல் தலைவர்கள் விமர்ச்சித்து வந்த நிலையில் தற்போது இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் காலை 10 மணிக்குத் தொடங்கப்பட்டது. பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யத்தொடங்கினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் பல துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இறுதியாக அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் குடும்பத் தலைவிகளுக்காக மாதம் ரூ.1000 உரிமத்தொகை வழங்கும் திட்டம் குறித்து வாசிக்கப்பட்டது. பட்ஜெட் அறிக்கையை வாசித்த நிதி அமைச்சர், திமுக அரசு தொடர்ந்து மகளிர் முன்னேற்றத்திற்காகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பட்ஜெட்டில் திட்டத்தை அமல்படுத்தும் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில், முன்னாள் தமிழ்நாட்டில் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் “தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்” என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கான ரூ.7000 கோடியை நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இத்திட்டத்திற்கான பட்ஜெட் அறிக்கையைப் படிக்கும் போது, ”தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு” என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். தொடர்ந்து, அதற்கான பணி நடைபெற்று வருவதாகவும் தகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதனால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 கிடைக்கவாய்ப்பு இல்லை என்பது தெரிகிறது. மேலும் அவையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், ”திமுக தேர்தல் வாக்குறுதியில் ரூ.1000 அனைத்து குடும்பத்தலைவிகளுக்கு என்ற குறிப்பிட்ட நிலையில் தற்போது தகுதி வாய்ந்தவர்கள் என்று கூறுவது ஏற்கக்கூடியதாக இல்லை” என்று கூறியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Minister Palanivel Thiagarajan, Ration, TN Budget 2023, Women