முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு விதிமீறல்கள்: சிஏஜி அறிக்கை

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு விதிமீறல்கள்: சிஏஜி அறிக்கை

சிஏஜி அறிக்கை

சிஏஜி அறிக்கை

நெடுஞ்சாலைத்துறைக்கான டெண்டர்களில், துறை அதிகாரிகளின் கணினியில் இருந்து ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை கணக்கு தணிக்கை அறிக்கை எனப்படும் சிஏஜி அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமையன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நெடுஞ்சாலைத்துறைக்கான டெண்டர்களில், துறை அதிகாரிகளின் கணினியில் இருந்து ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், ஒரே கணினியில் இருந்து பல்வேறு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் கிடைக்கும் வகையில் விதிமீறல் நடைபெற்று உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சிஏஜி அறிக்கையில், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில், தகுதி உள்ளோருக்கு வீடுகளை வழங்காமல், தகுதியற்றோருக்கு வீடுகள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு அறிக்கையில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 8 சிமெண்ட் ஆலை சுரங்கங்கள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

First published: