முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பட்ஜெட் கூட்டத்தொடர்; அரசுக்கு நெருக்கடி கொடுக்க அதிமுகவின் திட்டம் இதுதான்...

பட்ஜெட் கூட்டத்தொடர்; அரசுக்கு நெருக்கடி கொடுக்க அதிமுகவின் திட்டம் இதுதான்...

மாதிரி படம்

மாதிரி படம்

ADMK Budget 2023 | சட்டம் ஒழுங்கு, பேனா நினைவுச் சின்னம், நீட் தேர்வு, எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் உள்ளிட்டவை குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்ப திட்டம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியாக அதிமுகவின் செயல்பாடு எப்படி இருக்க போகிறது? என்னென்ன பிரச்னைகளை பேரவையில் அக்கட்சி முன்வைக்க திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ம் தேதி தொடங்குகிறது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை பட்டியலிட பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தயாராகி வருகிறது.

அதன் படி, சட்டம் ஒழுங்கு, பேனா நினைவுச் சின்னம், நீட் தேர்வு, பால் விலை உயர்வு, அவற்றின் விநியோகத்தில் உள்ள பிரச்சனைகள், காய்ச்சல் பரவல், சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் உள்ளிட்டவை குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்ப உள்ளதாக அதிமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மாதாந்திர மின் கணக்கீடு அறிவிப்பு வெளியாகுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

ஏற்கனவே ஜனவரியில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் இருக்கை தொடர்பாக கருப்பு சட்டை அணிந்து அதிமுக எதிர்ப்பை பதிவு செய்தது. அது போல மீண்டும் தங்களது எதிர்ப்பை அதிமுக வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து முன்னாள் அமைச்சரும் மதுரை திருமங்கலம் எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில், ’எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசு, வரி இல்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததாக கூறினார். அதே போல், திமுக அரசின் நிதிநிலை அறிக்கை "பூனை தன் வாயால் எலியை கவ்வுவது போல் இல்லாமல், பூனை தன் குட்டியை கவ்வுவது போல் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தலைமை பிரச்சனை, எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் வெற்றி உள்ளிட்டவை குறித்தும் சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: ADMK, TN Budget 2023