முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கர்நாடக தேர்தலில் திடீர் திருப்பம்.. கோரிக்கை வைத்த பாஜக: வேட்பாளர்களை திரும்ப பெற்ற இபிஎஸ்!

கர்நாடக தேர்தலில் திடீர் திருப்பம்.. கோரிக்கை வைத்த பாஜக: வேட்பாளர்களை திரும்ப பெற்ற இபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. அதன்படி, புலிகேசி நகர் தொகுதியில் மட்டும் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு, வேட்பாளராக அன்பரசன் களமிறக்கப்பட்டார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காத்திநகர், கோலார் தங்கவயல் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட  வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர்.

கர்நாடகாவில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. அதன்படி, புலிகேசி நகர் தொகுதியில் மட்டும் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு, வேட்பாளராக அன்பரசன் களமிறக்கப்பட்டார். இதேபோல், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல் காந்திநகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற அன்பரசனின் மனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் காந்திநகர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவுடன் மனுத் தாக்கல் செய்த குமாரின் மனு அதிமுக வேட்பாளராகவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் மனு சுயேச்சையாகவும் ஏற்கப்பட்டது.

இந்த நிலையில், பாஜக மேலிடத் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு, வேட்பாளரை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று, அன்பரசன் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: 12 மணி நேர வேலை மசோதா- இன்று முதல்வரைச் சந்திக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள்

top videos

    அதேபோன்று, தற்போது ஒபிஎஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட  காத்திநகர், கோலார் தங்கவயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களும் தங்களது மனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.  வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள இன்றே கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: EPS, Karnataka, OPS