முகப்பு /செய்தி /தமிழ்நாடு / செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் - அண்ணாமலை ஆவேசம்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் - அண்ணாமலை ஆவேசம்

செந்தில் பாலாஜி, அண்ணாமலை

செந்தில் பாலாஜி, அண்ணாமலை

தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக தேர்தல் பணி செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளிடம் பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் நாளை மறுநாள் ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர்களிடையே உரையாற்றினார். தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக தேர்தல் பணி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், 2024 என்பது பாஜகவிற்கு பலபரீட்சை என்றார்.

இதையும் படிங்க: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பின்தங்கியநிலையில் வட மாவட்டங்கள்... வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்...

top videos

     தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து விட்டதாகவும் இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முறையிட உள்ளதாகவும் கூறினார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முறையிடப் போவதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Annamalai, Senthil Balaji