முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும்... நடிகை நமிதா நம்பிக்கை..!

தமிழகத்தில் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும்... நடிகை நமிதா நம்பிக்கை..!

நடிகை நமிதா

நடிகை நமிதா

கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், அதேபோல தமிழகத்திலும் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் என நமிதா தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமிதா தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலிஸ்வரர் கோயிலில் 1008 தாமரை மலர்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தினார். அதன் பின்னர் திருக்கோயிலில் இலவசமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக உறுப்பினர் நமீதா,  “என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்துள்ளேன். இது எனக்கு மிகவும் சிறப்பான நாள். கர்நாடகா தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இன்று 1,008 தாமரை மலர்களை வைத்து இந்த சிறப்பு பூஜையை மேற்கொண்டேன்.

கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன். கருத்துக்கணிப்புகளை நான் நம்புவது கிடையாது. கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதேபோல தமிழகத்திலும் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் என கூறினார்.

இதையும் படிங்க; அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் வழக்கு!

மேலும், தமிழக முதலமைச்சர் சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, அதை அவர் பார்த்துக்கொள்வார் என்று பதிலளித்துள்ளார்.

First published:

Tags: Actress Namitha, BJP, Karnataka Election 2023