முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 12 மணி நேர வேலை திட்டம் கட்டாயம் இல்லை - வானதி சீனிவாசன் பேச்சு

12 மணி நேர வேலை திட்டம் கட்டாயம் இல்லை - வானதி சீனிவாசன் பேச்சு

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வேலை நேரத்தை உயர்த்துவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக-வின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

  • Last Updated :
  • Chennai, India

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது.

தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதனை பின்பற்றும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். அப்போது, வேலை நேரத்தை உயர்த்துவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக-வின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், இந்த சட்டம் யாருக்கும் கட்டாயம் இல்லை எனவும் விருப்பப்படுபவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

top videos

    First published:

    Tags: Facebook Videos, TN Assembly, Vanathi srinivasan