முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கர்நாடகா போல தமிழக அரசியலில் கண்ணியம் இல்லை- அண்ணாமலை வேதனை

கர்நாடகா போல தமிழக அரசியலில் கண்ணியம் இல்லை- அண்ணாமலை வேதனை

கர்நாடகா போல தமிழக அரசியலில் கண்ணியம் இல்லை- அண்ணாமலை வேதனை

தமிழ்நாட்டு அரசியலில் கண்ணியம் இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகா போல தமிழ்நாட்டு அரசியலில் கண்ணியம் கடைபிடிக்கப்படுவதில்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக, பிரதான கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிவருகிறார்.

இந்தநிலையில் தேர்தல் பணிகளுக்கு நடுவில் நியூஸ்18 தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர், ‘ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்று வரும் சோதனைக்கும் பாரதிய ஜனதாவிற்கும் தொடர்பில்லை. திமுக ஆட்சிக்கு பிறகு, ஜி ஸ்கொயர் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது எப்படி? தமிழ்நாட்டு அரசியலில் கர்நாடகா போல் கண்ணியம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வி கர்நாடகாவை விட பின்னோக்கி செல்கிறது’ என்று தெரிவித்தார்.

top videos

    இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், ‘தேர்தல் வரவுள்ளதால் யார் யார் எதிர்க்கிறார்களோ, அவர்களை களங்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Annamalai, BJP