ஜூலை முதல் வாரம் DmK files 2 வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அமைச்சர் ஆவடி நாசரை நீக்கியதற்கு பாஜக வரவேற்பு அளிப்பதாகவும், கடந்த பிப்ரவரி மாதம் பாலில் உள்ள பச்சை நிற பாக்கெட்டில் பாலின் கொழுப்பு அளவை குறைதுள்ளதால் நாசர் மாற்றப்பட்டதற்கு வரவேற்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டி.ஆர். பி.ராஜாவின் குடும்பம் அனைத்து துறையிலும் உள்ளது, முதல்வர் எதன் அடிப்படையில் தொழிற்துறையை அவருக்கு கொடுத்தார்கள். டிஆர்பி ராஜா சாராய ஆலை வைத்துள்ளனர் , அவரால் தொழில்துறையில் திறம்பட பணியாற்ற முடியுமா, இதன் மூலம் திமுக அரசில் சாராய உற்பத்தி , விற்பனை அனைத்தையும் தங்கள் கையில் வைத்திருக்க நினைக்கின்றனர். டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது நகைப்பிற்குரியது. அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியவர். பல ஊழல்களை செய்தவர் டிஆர்.பாலு , மேலும் அதிகமாக அவர் மீது குற்றங்களை முன் வைப்பேன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து மாற்றியது ஏற்புடையதல்ல, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயலாற்றுகிறார் என கூறிய முதலமைச்சர் இப்போது மாற்றுவதற்கு காரணம் என்ன, பிடிஆர் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசடராக இருந்த அவரை மாற்ற காரணம் என்ன, ஆடியோ பிரச்சனைக்காக அவரை மாற்றியது ஏற்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் என் மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர வேண்டும் அதன் மூலம் அந்த ஆடியோ நீதிமன்றம் செல்லும், 1 மணி நேர முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் பிடிஆரை பகடைக்காயாக முதலமைச்சர் பயன்படுத்த கூடாது என கூறியுள்ளார்.
ஜூலை முதல் வாரம் DmK files 2 வெளியிடப்படும் ஆருத்ரா மோசடி பணம் எந்த தமிழக அமைச்சருக்கு சென்றது என DMK files 2ஆம் பாகத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சேகர்பாபு மகள் தனது பிரச்சனைக்காக என்னிடம்தான் முதலில் வந்தார் , ஆனால் குடும்ப பிரச்சனை என்பதால் நீதிமன்றம் செல்ல சொன்னேன் , இங்கு இல்லை என்றால் , கர்நாடக காவல்துறையை அணுக சொன்னேன். குடும்ப பிரச்ணனையில் பாஜக தலையிட விரும்புவதில்லை. ஆனால் அரசு எந்திரம் , தமிழக காவல்துறையை பயன்படுத்தி அந்த சகோதரிக்கு மனச்சுமையை ஏற்படுத்தி உள்ளனர் , சாமானிய மனிதன் மீது தொடர்ந்து வழக்கு போடுவது தவறு. முதலமைச்சர் டிஜிபிக்கு இது குறித்து உத்தரவிட வேண்டும். அரசு தவறு செய்யவில்லை என்றால் வழக்கு ஏன் தொடரப்பட்டது என முதலமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Annamalai, DMK, Minister Palanivel Thiagarajan, Tamilnadu