முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டி... அண்ணாமலையின் விருப்பத்தை டெல்லி தலைமை நிராகரித்ததா?

மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டி... அண்ணாமலையின் விருப்பத்தை டெல்லி தலைமை நிராகரித்ததா?

அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பில் உடனிருந்த அண்ணாமலை

அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பில் உடனிருந்த அண்ணாமலை

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அண்ணாமலையை விருப்பத்தை பாஜக தலைமை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற அண்ணாமலை திட்டத்தை நிராகரித்த டெல்லி பாஜக தலைமை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

எல்.முருகனுக்கு பிறகு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவின் தலைவராக நியமிக்கபட்டார். அண்ணாமலை நியமிக்கப்பட்டத்தில் இருந்தே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

குறிப்பாக பாஜக முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகியதோடு மட்டுமின்றி அண்ணாமலையை கடுமையாக சாடினர்கள். இந்த நிலையில் அதிமுக இல்லாத ஒரு கூட்டணியை அமைத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் 25 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது பாஜக தலைவர் அண்ணாமலையின் திட்டமாக இருந்தது.

குறிப்பாக தேமுதிக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென விரும்பினார். இதுதொடர்பாக கடந்த மூன்று மாதத்திற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் பொழுது அதற்கான திட்டமிடல் தொகுப்பையும் பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

ஆனால் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி தலைமையில் தான் பேசிக் கொள்வதாக அவர்கள் தான் பாஸ் எனவும் குறிப்பிட்டிருந்தார்.  இந்த நிலையில் நேற்று டெல்லியில் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் ஒன்றிணைந்து அமிச்சாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி, ’அதிமுக, பாஜக இடையே எந்த தகராறும் இல்லை. குறிப்பாக அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த தகராறும் இல்லை. கூட்டணி வலுவாக நீடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் தனித்துப் போட்டியிட வேண்டும். அதிமுக இல்லாத கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை டெல்லி தலைமை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐடி ரெய்டு மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது... உதயநிதி ஸ்டாலின்

top videos

    முன்னதாக, பல்வேறு கட்சிகளின் சொத்துப் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். எனவே இனி அதை அண்ணாமலை கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    First published:

    Tags: Annamalai, BJP