முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுகவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்... பதில் அளிக்க வேண்டும் - குறிவைக்கும் அண்ணாமலை

திமுகவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்... பதில் அளிக்க வேண்டும் - குறிவைக்கும் அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai tweet | திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுகவின் சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு திமுக பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக - திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது. அண்ணாமலை கையில் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும், அது பல லட்சம் மதிப்புடையது என்றும் திமுகவினர் விமர்சித்தனர். ஆனால், அது வெளிநாட்டு வாட்ச் அல்ல, ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட வாட்ச் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும் என திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அண்ணாமலை நேற்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ரபேல் வாட்ச் வாங்கியதற்கான விவரங்களை வெளியிட்டார். மேலும், திமுக மூத்த தலைவர்களின் சொத்து பட்டியல் என்ற பெயரில் பல ஆவணங்களையும் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  ஏப்ரல்14ஆம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன்.

அவற்றின் விவரங்கள் enmannenmakkal.com என்கிற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

மேலும், திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் மக்களால், மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற பொறுப்பை இனியாவது உணர வேண்டும். எனவே, இன்று முதல், திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம். மக்களுக்கான எங்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களையும் திமுகவிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

top videos

    First published:

    Tags: Annamalai, BJP, DMK