முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும்” - மத்திய நிலக்கரித் துறை அமைச்சரை சந்தித்த அண்ணாமலை..!

“விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும்” - மத்திய நிலக்கரித் துறை அமைச்சரை சந்தித்த அண்ணாமலை..!

மத்திய அமைச்சருடன் சந்திப்பு

மத்திய அமைச்சருடன் சந்திப்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சந்தித்தார்.

  • Last Updated :
  • Karnataka, India

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7வது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க விவசாயிகள், அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நிலக்கரி ஏல நடைமுறையை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை மனு அளித்தார். அமைச்சரும் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

top videos

    இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Annamalai, BJP