தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அன்றைய தினம், அடுத்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையும், அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று கூடிய சட்டபேரவையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், நான் கனத்த இதயத்தோடு இங்கு நின்று கொண்டிருக்கிறேன் இதுவரை ஆன்லைன் ரம்மிய தமிழ்நாட்டில் 41 பேர் உயிரிழந்தனர் . நாளுக்கு நாள் இந்த மரணங்கள் நம் கண்ணுக்கு முன்னால் நடக்கிறது இதனை தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்துதான் இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய, ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம்.
மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் இதை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு.மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவானது. மனசாட்சியை உறங்க செய்துவிட்டு எங்களால் ஆட்சி செய்ய முடியாது. இனி ஒரு உயிர் பறிக்கப்படாமல்., இனி ஒரு குடும்பம் நடுத்தெருவில் வராமல் இருக்க இந்த இணையவழி சூதாட்ட சட்ட முன்வடிவை சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றி தர வேண்டும்.” என்றார்.
இதையடுத்து பேசிய திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த மசோதாவிற்கு ஆதரவாக பேசினர். மேலும் அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Online application, Online rummy, TN Assembly, TN Budget 2023