முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ”ஜல்லி கற்களால் பற்களை உடைத்தார்... “ - ஏஎஸ்பிக்கு எதிராக அடுத்தடுத்து எழும் பகீர் புகார்கள்..!

”ஜல்லி கற்களால் பற்களை உடைத்தார்... “ - ஏஎஸ்பிக்கு எதிராக அடுத்தடுத்து எழும் பகீர் புகார்கள்..!

பல்வீர் சிங்

பல்வீர் சிங்

அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் 3 சிறார்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதாக ஏ.எஸ்.சி பல்வீர் சிங் மீது புகார் எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Ambasamudram, India

விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து கொடுமையாகப் பற்களைப் பிடுங்கிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை  உண்டாக்கியது. இதுதொடர்பாக  உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது புகார் எழுந்த நிலையில்,  அவர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, தற்போது பல்வீர் சிங் மேல் அடுத்தடுத்து பகீர் புகார் எழுந்துள்ளன.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் 3 சிறார்களைக் கொடுமையாகத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவிக்கையில்,  ஜல்லி கற்களைக் கொண்டு பற்களைத் தேய்த்து உடைத்ததாகவும், கண்மூடித்தனமாகத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் இருந்த 16 வயது சிறுவனின் சுண்டு விரலில் கடுமையாகத் தாக்கி உடைத்ததாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே விசாரணையில்போது பற்களைப் பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

top videos
    First published:

    Tags: Crime News