முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “ஆடைகளை கழற்றி ஆணுறுப்பில் தாக்கினர்...” - பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் புதுமாப்பிள்ளை பகீர் பேட்டி..!

“ஆடைகளை கழற்றி ஆணுறுப்பில் தாக்கினர்...” - பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் புதுமாப்பிள்ளை பகீர் பேட்டி..!

மாரியப்பன் பிரத்யேக பேட்டி

மாரியப்பன் பிரத்யேக பேட்டி

காவல்நிலையத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாரியப்பன் நியூஸ் 18க்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விசாரணை என்ற பெயரில் பற்களை ஜல்லிக் கற்களைக் கொண்டு அடித்து உடைத்து சித்ரவதை செய்ததாக, உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது பாதிக்கப்பட்ட நபர் குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவந்திபுரத்தை சேர்ந்த இசக்கி முத்து மற்றும் அவரது சகோதரர்களான செல்ல பாண்டியன், மாரியப்பன் உள்ளிட்டோரை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து பல்வீர் சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், உதவி காவல் கண்காணிப்பாளரால் தாக்கப்பட்டு நெல்லை பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாரியப்பன், நியூஸ் 18 க்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

அதில், காவல்நிலையத்தில் தன்னை கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார். ஜல்லி கற்களைக் கொண்டு அடித்து உடைத்ததாகவும், ஆடைகளைக் கழற்றச் சொல்லி பிறப்புறுப்பில் தாக்கியதாகவும் கூறியுள்ளார். இதனால், சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டதாகவும் மாரியப்பன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Also Read : “இதே டெல்டாக்காரர் தானே மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்...” முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்..!

top videos

    மேலும், மருத்துவமனையில் இதைப் பற்றி ஏதும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, இவர்களை அடிக்கும் போது, தரையில் விழுந்த ரத்தத்தை  துணியில் துடைக்க வைத்தாகவும் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Crime News, Tirunelveli