அரசினர் தீர்மானத்தின் நல்விளைவாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
முதல்வர் தனது உரையில், இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனித் தீர்மானத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் சட்டம் குறித்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு, நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, இதனால் தமிழ்நாட்டின் நிருவாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம்.
மேலும், பொது வெளியில் ஆளுநர் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்தும் நாம் இங்கு குறிப்பிட்டிருந்தோம்.
கட்டாயம் வாசிக்க: ஆளுநர் அரசியல்சட்டத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்: அரசியல்கட்சிக்கு அல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தச் சூழ்நிலையில், இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் ஒரு நல்விளைவாக, இன்று மாலை ஆளுநர் , ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கட்டாயம் வாசிக்க: ஆளுநர் ரவி-க்கும் ஆசை வந்திருக்கலாம்.. பேரவையில் துரைமுருகன் விமர்சனம்
மேலும், இந்தச் சட்டமானது இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் பேரவைத் தலைவர் மூலமாக இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்." என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.