முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கணவன் - மனைவி அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு ஆட்சியர்களாக நியமனம்... சுவாரஸ்ய தகவல்..!

கணவன் - மனைவி அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு ஆட்சியர்களாக நியமனம்... சுவாரஸ்ய தகவல்..!

 விஷ்ணு சந்திரன் - ஆஷா அஜித்

விஷ்ணு சந்திரன் - ஆஷா அஜித்

IAS Officers Transfer | சிவங்கை ஆட்சியராக ஆஷா அஜித்தும் ராமநாதபுரத்துக்கு விஷ்ணு சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஒரே நாளில் 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோரும், காஞ்சிபுரம் ஆட்சியராக கலைச்செல்வி மோகனும், அரியலூருக்கு ஆனி மேரி சுவர்ணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் டாம் வர்கீஸ் நாகப்பட்டினம் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

இதேபோன்று, கடலூர் ஆட்சியராக அருண் தம்புராஜும், புதுகோட்டைக்கு மெர்சி ரம்யாவும், தஞ்சாவூருக்கு தீபக் ஜேக்கப், நாமக்கல்லுக்கு உமாவும் புதிய ஆட்சியர்களாக பொறுப்பேற்கின்றனர்.

மேலும், ராஜகோபால் சுங்கரா ஈரோடு மாவட்ட ஆட்சியராகவும்,

கிறிஸ்து தாஸ் திருப்பூருக்கும், சரயு கிருஷ்ணகிரிக்கும், சங்கீதா மதுரை மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

' isDesktop="true" id="980569" youtubeid="7HeUbLVvBkQ" category="tamil-nadu">

top videos

    சிவங்கை ஆட்சியராக ஆஷா அஜித்தும் ராமநாதபுரத்துக்கு விஷ்ணு சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். கணவன் மனைவியான இருவரும் அருகருகே உள்ள மாவட்டத்தின் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    First published:

    Tags: District collectors, IAS Transfer