முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி வளராது” - பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்...!

“பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி வளராது” - பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்...!

அண்ணாமலை - கிருஷ்ண பிரபு

அண்ணாமலை - கிருஷ்ண பிரபு

அண்ணாமலை மீது குற்றம்சாட்டி பாஜகவின் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

ஆருத்ரா நிதி நிறுவனத்தில், அதிக வட்டி தருவதாக பொதுமக்களை ஏமாற்றி 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில், இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மாநில செயலாளராருமான ஹரீஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக-வில் பதவி பெறுவதற்காக, அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆருத்ரா நிறுவன மோசடியில் ஈடுபட்டுள்ள நபர்கள் மாநில தலைமையுடன் நெருக்கமாக இருந்து வருவதை கண்டும் காணாமல் இருக்க முடியாததால், பாஜக-வின் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக கிருஷ்ண பிரபு அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க; "40 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு..." - 71,000 பேருக்கு பணி ஆணை வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்..!

top videos

    மேலும், கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் பாஜக வளராது என்றும் கிருஷ்ண பிரபு விமர்சித்துள்ளர்.ஏற்கனவே பாஜக ஐடி பிரிவு பொறுப்பாளராக இருந்த நிர்மல் குமார் விலகி அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நிர்வாகி பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

    First published: