முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மெட்ரோ ஒப்பந்தம் தொடர்பாக முதலமைச்சர் மீது சி.பி.ஐயில் புகார்- அண்ணாமலை

மெட்ரோ ஒப்பந்தம் தொடர்பாக முதலமைச்சர் மீது சி.பி.ஐயில் புகார்- அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

அதிமுக, பாஜகவின் தலைமைத் தலைவர்கள் சந்தித்துக் கொண்டதை வைத்தே பாஜக கூட்டணி குறித்து தெரிந்திருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

மெட்ரோ ஒப்பந்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது சிபிஐயில் புகார் வழங்கப்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘சமீபத்தில் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததை வைத்து நீங்களே அதிமுக கூட்டணியை ஊர்ஜித்துக்குக் கொள்ளுங்கள். திட்டமிட்டபடி பாஜக சார்பில் ஊழல் பட்டியல்கள் வெளியிடப்படும். அதிமுக கூட்டணி அமைந்தால் பாஜக தலைவராக தொடர்வீர்களா என்ற கேள்விக்கு? நான் எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று மோடியும் அமித்ஷாவும் எனக்கு வகுத்துள்ளனர்.

அந்த பாதையில் பயணிப்பேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘2024 தேர்தலில் 39 தொகுதிகளையும் வென்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். திமுகவுக்கு எதிராக உள்ள மனநிலையை பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று பேச்சுவார்த்தை தற்போது நடைப்பெறவில்லை. அதிமுக, பாஜகவின் தலைமைத் தலைவர்கள் சந்தித்துக் கொண்டதை வைத்தே பாஜக கூட்டணி குறித்து தெரிந்திருக்கும்.

கட்சி, தலைவர்களைக் கடந்து ஊழலுக்கு எதிராக பாஜக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அது தெரியவரும். 2024 தேர்தல் என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தேர்தல். தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நிதியமைச்சர் பிடிஆர் குறித்து ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை மீண்டும் மிரட்டப்போகும் மிக கனமழை : வானிலை மையம் கொடுத்த ஹை அலெர்ட்!

இவ்விவகாரத்தில் பழனிவேல் தியாகராஜன் தவறு செய்யவில்லை. அவரின் ஒப்புதல் வாக்கு மூலத்தைதான் வெளியிட்டுள்ளோம். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் ஒரிஜினல் ஆடியோவை வெளியிடத் தயாராக உள்ளோம். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவை ஒட்டுக்கேட்டு வெளியிடவில்லை. தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி, ஆனால் தேர்தலின் முகமாக பிரதமர் மோடி உள்ளார்’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, BJP