முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமித்ஷா, இபிஎஸ் சந்திப்பை வைத்து கூட்டணியை யூகிக்கலாம்... அண்ணாமலை சூசகம்

அமித்ஷா, இபிஎஸ் சந்திப்பை வைத்து கூட்டணியை யூகிக்கலாம்... அண்ணாமலை சூசகம்

அண்ணாமலை

அண்ணாமலை

அதிமுகதான் பெரிய கட்சி என்றாலும், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியின் முகம் பிரதமர் மோடி தான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

மெட்ரோ ஒப்பந்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது சிபிஐ-யில் புகார் அளித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை நடுக்குப்பத்தில் 'மனதின் குரல் ' நிகழ்ச்சியின் 100வது பதிப்பை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீனவ மக்களுடன் அமர்ந்து பார்த்தனர். அதனைத் தொடர்ந்து, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: மனதின் குரல் 100: பெண் சிசு கொலைகளை தடுக்க 'செல்ஃபி வித் டாட்டர்' திட்டம் - பாராட்டிய மோடி

top videos

    இதனையடுத்து மேடையில் பேசிய அண்ணாமலை, அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, அமித்ஷா-ஈபிஎஸ் சந்திப்பை வைத்து ஊகித்துக் கொள்ளலாம் என பதிலளித்தார். தமிழ்நாட்டில் அதிமுகதான் பெரிய கட்சி என்றாலும், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியின் முகம் பிரதமர் மோடி தான் என தெரிவித்தார்.

    First published:

    Tags: Annamalai, CBI