பாஜகவில் இளைஞர்கள் நிறைய பேர் போட்டியிட்டனர். நாங்கள் இந்த தேர்தலில் ரிஸ்க் எடுத்தோம். எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது உண்மை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘பாஜகவில் களத்தில் இருந்தவர்கள் இளம்தளம் முறையினர். ஆனால் காங்கிரஸ் கட்சியில் 92 வயது வேட்பாளர் களம் கண்டார். நாங்கள் இந்தத் தேர்தலில் ரிஸ்க் எடுத்தோம். 75 ஆண்டு வயதான எடியூரப்பா கையில் இருந்த பாஜக தற்போது அடுத்த நிலைக்கு சென்றுள்ளது. எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது உண்மை. பாண்டிச்சேரி பாஜக துணையுடன் ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகா, தெலுங்கானாவில் எம்.பிகள் உள்ளனர்.
தேசிய கட்சி நிலா போல வளரும். 2019ம் ஆண்டு ஏன் முதல்வர் இந்த கருத்தைச் சொல்லவில்லை. முதல்வருக்கு பாஜகவின் வளர்ச்சி கண்டு பயம் உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியை தக்க வைத்தது கிடையாது. அதிமுக மட்டுமே தக்கவைத்தது. 67ல் இருந்து ஆட்சியில் இருக்கும் நீங்கள் ஏன் தக்க வைக்கவில்லை.
முதல்வர் கர்நாடகா செல்ல வேண்டும். அங்குள்ள சூழலைப் பார்க்க வேண்டும். சித்தராமையா என் மீது பறிவோடு இருப்பார். சித்தராமையா ஆட்சியில் 5 வருட எஸ்.பியாக பணியாற்றியுள்ளேன். அவர் மாஸ் லீடர். அதில் மாற்று கருத்து இல்லை. டி.கே.சிவகுமார் தகுதி வாய்ந்தவர். யார் முதல்வராக வந்தாலும் சரி. கர்நாடகா காங்கிரஸ் நல்ல ஆட்சியை கொடுங்கள். ஆனால் தயவு செய்து தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல மேகதாதுவை கொண்டு வந்து விடாதீர்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் - துல்லியமாக வழங்கி முதலிடம் பிடித்த நியூஸ் 18 தமிழ்நாடு
நீங்கள் மேகதாதுவை கொண்டு வந்தால் அதனுடைய முதல் போராட்டம் பாஜக சார்பில் என்னுடையதாக இருக்கும். கர்நாடக புதிய ஆட்சிக்கு முதல்வர் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில் மேகதாது வேண்டாம் என்று முதல்வர் குறிப்பிடுவாரா என்று பார்த்தேன். ஒரு வார்த்தை உள்ளதா என்று நானும் துலாவி பார்த்தேன். ஆனால் அதைப் பற்றி முதல்வர் வாயை திறக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Karnataka Election 2023