முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மன்னிப்பு கேட்க முடியாது... தி.மு.க அனுப்பிய நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில்

மன்னிப்பு கேட்க முடியாது... தி.மு.க அனுப்பிய நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில்

அண்ணாமலை

அண்ணாமலை

திமுக தலைவர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் ஒருபோதும் மன்னிப்பு கேட்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், உதய நிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்களின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்களை போலியானவை என்று தி.மு.க சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

திமுகவினர் மீது அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகளுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, ’சட்டத்திற்கு புறம்பாகவோ, அவதூறாகவோ எதையும் கூறவில்லை எனவும், ஆர்.எஸ்.பாரதி கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். திமுகவின் சொத்துகள் குறித்த தகவல்கள் அனைத்தும் முழுமையான விசாரணைக்குப் பின்னரே எடுக்கப்பட்டதாகவும், தனது குரலை ஒடுக்குவதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேர வேலை- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

top videos

    தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும், மன்னிப்பு கேட்பது மற்றும் இழப்பீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அண்ணாமலை அனுப்பியுள்ள பதில் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Annamalai