முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உதயநிதி அறக்கட்டளைக்கும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? - அண்ணாமலை கேள்வி

உதயநிதி அறக்கட்டளைக்கும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? - அண்ணாமலை கேள்வி

உதயநிதியிடம் அண்ணாமலை கேள்வி

உதயநிதியிடம் அண்ணாமலை கேள்வி

முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் இதுவரை பதில் வரவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விளக்கம் தரப்படுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்லல் குழும விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை வங்கிக்கணக்கில் இருந்த சுமார் 34 லட்சம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக சொத்து பட்டியல் வெளியிட்டபோதே நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்து கேள்வி எழுப்பியதாகவும், முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.

முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளதாகவும் அண்ணாமலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவிலும் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மேலும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருவதாகவும், இரு நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து பதில் அளிக்கப்படுமா எனவும் அண்ணாமலை வினவியுள்ளார்.

First published:

Tags: Annamalai, Udhayanidhi Stalin