முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்..." - அமித் ஷாவிடம் அண்ணாமலை வலியுறுத்தல்?

"அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்..." - அமித் ஷாவிடம் அண்ணாமலை வலியுறுத்தல்?

மாதிரி படம்

மாதிரி படம்

Annamalai Meet Amit Shah | அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் வருங்காலத்தில் பாஜக நினைத்த அளவிற்கு வளர முடியாது என அண்ணாமலை வெளிப்படையாக அமித் ஷாவிடம் கூறியதாக தகவல்

  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உடையும் சூழல் உருவாகி உள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி புறப்பட்டுச் சென்ற அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக உடன் பாஜக கூட்டணியை தொடர வேண்டாம் என்று தன்னுடைய நிலைப்பாட்டை அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் வருங்காலத்தில் பாஜக நினைத்த அளவிற்கு வளர முடியாது என அண்ணாமலை வெளிப்படையாக அமித் ஷாவிடம் கூறியதாக தெரிகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி முடிவை உரிய நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குழுவில் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என அமித் ஷா கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவைதவிர கட்சியின் தலைமை நிர்வாகிகளையும் சந்தித்து அண்ணாமலை ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 4 மாநிலங்களில் புதிய தலைவர்கள் நியமனம்... பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா அறிவிப்பு..

முன்னதாக டெல்லி புறப்படுவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை, நிரந்தரமான எதிரிகளும் இல்லை என்றார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும், திமுகவினர் வெறும் பொய் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

First published:

Tags: Amit Shah, Annamalai