முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேர்தலுக்கு 9 மாதம் உள்ளது... அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை விளக்கம்

தேர்தலுக்கு 9 மாதம் உள்ளது... அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை

அண்ணாமலை

அதிமுகவுடனான கூட்டணி குறித்து தேசியத் தலைமைதான் முடிவு எடுக்கும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘அதிமுக கூட்டணி இறுதியாகிவிட்டதாக கூற முடியாது. கூட்டணியில் இருக்கிறோம் என்று அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணியை உறுதி செய்யவில்லை. தேர்தலுக்கு 9 மாதம் உள்ள நிலையில் கூட்டணி குறித்து எதுவும் கூற இயலாது. கூட்டணி குறித்த இறுதி முடிவை பாஜக தேசிய தலைமை தான் எடுக்கும். அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் கிடையாது.

தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம்.

அதிமுக-பாஜக கூட்டணி இறுதி, உறுதி என இப்போது எதுவும் கூற முடியாது. கூட்டணி குறித்து தற்போது இறுதி முடிவு எடுக்க முடியாது. பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என நான் கூறியதில்லை. 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக வேண்டும். 20 ஆண்டுகளுக்குப் பின் பாஜக வளர்ச்சி பற்றி சிந்தித்தால் இப்போது செல்லும் பாதை சரியானதாக இல்லை.

அமித்ஷா சொன்ன கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். பாஜகவை வழிநடத்திச் செல்வது தலைவராக என்னுடைய கடமை. கூட்டணியை முடிவு செய்வது அமித்ஷா மற்றும் நட்டா போன்றோர் தான். 2024, 2026, 2030 எப்படி என்ற கருத்துக்களை அமித்ஷா உடனான சந்திப்பின்போது தெரிவித்திருக்கிறேன். 2024-ம் ஆண்டு தேர்தலில் நான் நின்றால் கிளீன் பாலிடிக்ஸைப் பார்ப்பீர்கள். தேசியத் தலைவரின் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன்.

அதிமுக கூட்டணியில் உள்ள கொள்கை, எங்கு நிற்க வேண்டும், எத்தனை சீட்கள் என்பதில் தான் வாதம். எதுவும் இங்கே கல்லில் எழுதப்பட்டது கிடையாது. மாநிலத் தலைவராக என்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறேன். இன்னும் ஒன்பது மாதம் தேர்தலுக்கு இருக்கும்போது பொறுத்திருங்கள். கூட்டணி உறுதியானது என இப்போது யாரும் சொல்ல மாட்டார்கள்.

கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் பயணிக்க தொடங்கி விட்டேன். 25 தொகுதிகள் வெற்றி பெறும் அளவிற்கு பாஜக பலமாக இருக்க வேண்டும். மாற்றத்திற்கான பெரிய எழுச்சியை தென்காசி மாநாட்டில் இருந்து பார்க்க தொடங்கி விட்டோம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எஸ்.பி.வேலுமணியை விமான நிலையத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தது மட்டுமே.

அரசியல் ரீதியாக எதுவும் கிடையாது. ஏப்ரல் 14 ஆம் தேதி ஊழல் பட்டியல், வாட்ச் பில் அனைத்தும் கொடுக்கப்படும். வானதி சீனிவாசன் உட்பட அனைவரும் இந்த கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். பாஜக தனித்து போட்டி என பொதுவெளியில் நான் எங்கும் கூறவில்லை. கட்சி வளர்வதற்கு என்று எனக்கு தனி இலக்கு இருக்கிறது. அது கூட்டணியிலா அல்ல தனித்தா என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல்- எடப்பாடி பழனிசாமி சூசகம்

இன்றைய தேதியில் சீட் ஒதுக்கீடு தொடர்பாக பேச வேண்டிய தேவை இல்லை. ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் பண்பு இருக்கும். கிளீன் பாலிடிக்ஸ் என்பதில் தெளிவாக இருக்கிறேன். பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி மக்கள் பிரதிநிதியாக வருவது எந்த பயனும் இல்லை’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, BJP